ஈரானை அச்சுறுத்தும் காற்று மாசு!!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அங்கு ஆரம்பப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தெஹ்ரானில் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கின்ற நிலையில், மக்கள் நெருக்கடி, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிற்சாலை மாசு ஆகியவற்றால், நகரம் முழுவதும் அடர்த்தியான புகை ஏற்பட்டது.
காற்றின் ஈரப்பதம் மற்றும் குறைவான மழைப்பொழிவு ஆகியவற்றால் காற்றின் தரம் மேலும் மோசமானது.
இதனையடுத்து தெஹ்ரான் மாகாண ஆளுநர் பாண்ட்பே, நகரத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பாடசாலைகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார்.
உலகத்திலேயே மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களில் தெஹ்ரானும் ஒன்று. இதன் விளைவாக ஈரானியர்கள் மோசமான உடல் பிரச்சினைகளால் அவதிப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்தியாவின் டெல்லியில் கடந்த நவம்பர் முதலாம் திகதி, காற்று மாசு 542 என்ற அளவில் மிக மோசமான நிலையை அடைந்திருந்த நிலையிர் மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர்.
அதேபோல், பாகிஸ்தானின் லாகூரில் கடந்த 6ஆம் திகதி அதிக காற்று மாசு ஏற்பட்டதால், அங்குள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை