அரசியல் நாடகத்தில் கோத்தா, அங்கயன், தயாசிறி!!
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஒரு நடவடிக்கை கூட எடுக்காத அரசாங்கத்தின் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் செயலாளர் தயாசிறி ஆனந்த சுதாகரனின் வீட்டில் அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருக்கின்றனர்.
மனைவியை இழந்த நிலையில் தன் இரு பிள்ளைகளையும் கைவிட்டு ஆனந்த சுதாகரன் சிறையில் இருந்தபோது அவருடைய விடுதலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் நல்லாட்சி அரசும், அதற்கு முண்டு கொடுத்தோரும் வேடிக்கை மட்டும் பார்த்தனர்.
பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு செல்லாத அரசாங்கம் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தயாசிறி இன்று ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு சென்று பிள்ளைகளை கொஞ்சி படம் எடுத்து நாடகமாடியதுடன்,ஆனந்த சுதாகரன் தமக்கு கிடைத்த தண்டனை தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதனால் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியாத நிலை காணப்பட்டுள்ளது. ஆனந்த சுதாகர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்க மீளப்பெறப்பட்டிருந்தால் அவரை விடுதலை செய்திருக்க முடியும்.அதனால்தான் அவரது விடுதலை தாமதமாகியுள்ளது. அடுத்த அரசாங்கத்தில் கோட்டபாய ராஜபக்ச பொறுப்பேற்றதன் பின்னர் அரசியல் பேதமின்றி இவ்விடயம் தொடர்பில் நல்லதொரு முடிவு எட்டப்படும் என உண்மைக்கு புறம்பான கதைகளை கதைத்து சென்றுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை