50 வீதம் நாளாந்த நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!

நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரித்துள்ளது.


மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், இந்த வருடத்தில் உயர்மட்டத்தை அண்மித்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமனலவௌ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 வீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90.5 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87.7 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80.2 வீதமாகவும், ரன்தெணிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 49.2 வீதமாகவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.