பொலன்னறுவையில் மெழுகு உருவ நூதனசாலை திறப்பு!!
பொலன்னறுவை புராதன தொழில்நுட்ப நூதானசாலையுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்துவைத்துள்ளார்.
அந்தவகையில் புதிய யுகத்திற்கேற்றவாறு நூதன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்தின் பண்டைய தொழிநுட்ப முறைகளை தற்போது வாழ்கின்ற மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், இலங்கையின் புராதன தொழிநுட்பதுடன் தொடர்புடைய தொல்லியல் பொறுமதிவாய்ந்த பொருட்களை சேகரித்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கிலும் ஜனாதிபதியினால் கடந்த ஜூலை மாதம் 3 திகதி இந்த நூதனசாலை திறந்துவைக்கப்பட்டது.
இதன் விசேட பிரிவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மெழுகு உருவ நூதனசாலையானது, ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.
இதில் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிப் புரிந்த அரச தலைவர்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரது பதவி காலத்தில் வெளிநாட்டு அரச தலைவர்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புகள், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை தேசிய நூதனசாலைகள் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக இந்த நூதனசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பகுதியையும் மக்களின் பார்வைக்காக ஜனாதிபதியினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
இதன்போது நூதனசாலையின் உறுதிப்பத்திரத்தை நூதனசாலைகள் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான ஆவணங்களையும் ஜனாதிபதி நூதனசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனுஜா கஸ்துரி ஆரச்சியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை