அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சியின் இறுதித் தருணத்தில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகமும், பௌத்த பிக்குவுமான மோதர சந்தே சுமன தேரர் தெரிவிக்கின்றார்.


இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகமும், பௌத்த பிக்குவுமான மோதர சந்தே சுமன தேரர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு ஒரு விதமாகவும், மற்றொருவருக்கு வேறொரு விதமாகவும் ஜனாதிபதி பாகுபாடு காட்டியிருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு இன்றுவரை எந்தவொரு மன்னிப்பும் வழங்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் அவசரமாக வெளிநாட்டு பெண்ணை கொன்ற குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் ஊடாக ஜனாதிபதி எதனை இலக்காகக் கொண்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக உறுதி வழங்கியுள்ள பின்னணியில், அதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூற முயற்சிப்பார் என மோதர சந்தே சுமன தேரர் தெரிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி என்ற விதத்தில் சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய இறுதித் தருணத்திலேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகமும், பௌத்த பிக்குவுமான மோதர சந்தே சுமன தேரர் கோரிக்கை விடுத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.