மீண்டும் விஷாலின் ‘மூன்று’ ஃபார்முலா!
விஷால் நடிப்பில் உருவாகிவரும் சக்ரா படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ஷ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்ஷன் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், விஷால் நடிக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சக்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் கெளதம்மேனன் வெளியிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் இப்படத்தை இயக்கிவருகிறார். இரும்புத்திரை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இவர். அதனாலேயே இப்படம், இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என தொடக்கத்தில் செய்திகள் உலா வந்தன. ஆனால், இச்செய்திகளை படக்குழு மறுத்துள்ளது. முற்றிலும் புதிய படமான இது த்ரில்லர் ஜானரில் உருவாகி
Moments
5,878
முற்பகல் 5:06 - 15 நவ., 2019
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
இதைப் பற்றி 628 பேர் பேசுகிறார்கள்
ஏற்கனவே இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தமான நிலையில், தற்போது ஷ்ருஷ்டி டாங்கே மூன்றாவது நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். விஷால் நடிப்பில் ஏற்கனவே வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திற்கு பின், இப்படத்தில் மீண்டும் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கருத்துகள் இல்லை