பிரபாகரனென்னும் பெருமிதம்...!

பொது வாழ்வில் ஜொலித்த எத்தனையோபேர் தம்சொந்த வாழ்வில் தோற்ற கதையுண்டு.பொது வாழ்க்கையில் எண்ணற்ற அறிவுரைகள் வழங்கிய பலர் தம்சொந்த வாழ்வில் விமர்சனங்களுக்கு ஆளானதுண்டு.பொது மேடைகளில் ஒழுக்கத்தை போதித்த பலபேர் தம்சொந்த வாழ்வில் அதை கோட்டைவிட்டதுண்டு.

தன்னை முண்ணுதாரனமாக வழிகாட்டியாக தலைமையாக ஏற்றுகொண்டோரை ஏவி விட்டு தாங்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்த பல தலைவர்கள் இங்குன்டு.ஆனால் போராட்ட வாழ்விலும் தன்சொந்த வாழ்விலும் இமியளவும் பிசகாமல் வாழ்ந்த வாழுகின்ற உத்தமர் ஒருவர் உண்டென்றால் அது அண்ணன்தான்.

அண்ணாக,தம்பியாக,ஆசானாக,வழிகாட்டியாக,காக்கும் கடவுளாக உங்களையும் உங்கள் இலட்சியத்தையும் உளமாற ஏற்று போராட்ட களத்தில் நின்ற போராளிகளுக்கும் தளபதிமாருக்கும் நஞ்சுமாலை ஒன்றை கொடுத்துவிட்டு நீங்கள் மட்டும் இரண்டை அணிந்துகொண்டு சாவுக்கு துளியும் அச்சமின்றி தன்னை நம்பி வந்தோருக்கும் அச்சத்தை போக்கி எல்லோருக்கும் முண்ணுதாரனமாக நின்றியளே இந்த வீரத்தை ஈகத்தை ஒழுக்கத்தை வார்த்தையில் வடிக்க இயலாது.

அதனால்தான் பிரபாகரன் என்னும் நாமம் இன்னும் பிரம்மிப்பாகவே இருக்கின்றது.

கார்த்திகை_மைந்தன்..

புலிகளின்_தாகம்_தமிழீழ_தாயகம்

பிரபாசெழியன்.

நன்றி :-

அழகே தமிழ் யாழ் அழகே

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.