பள்ளிவாசல்களின் மீது விசமிகள் தாக்குதல்!

காலி – தலா­பிட்­டிய மற்றும் இரத்­தி­ன­புரி நிவித்­தி­கல – கெட்­ட­னி­கே­வத்த பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தாக்­குதல் ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­க­ளிப்பு இடம்­பெற்ற கடந்த 16ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இரு பள்­ளி­வா­சல்கள் மீதும் கற்கள் கொண்டு தாக்­குதல் நடத்­தப்பட்­டுள்­ள­ நிலையில் பள்­ளி­வா­சல்­களின் யன்னல் கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ள­து.

இதேவேளை, இரத்­தி­ன­புரி – நிவித்­தி­கல பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கெட்­ட­னி­கே­வத்த பகுதியில் உள்ள பள்­ளி­வாசல் மீது நேற்றையதினம் கல்­வீச்சு தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாக்குதல் சம்­பவம் தொடர்பில் நிவித்­தி­கல பொலிஸார் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்துள்ள நிலையில் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரு­வரைக் கைது செய்­துள்­ளனர்.

மேலும் பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளி­களை மைய­ப்ப­டுத்தி முன்­னெ­டுத்த விஷேட விசா­ர­ணை­களில் முச்­சக்­கர வண்­டியில் அவ்­வி­ரு­வரும் வந்து தாக்­குதல் நடத்­து­வது தெரியவந்துள்ள நிலையிலேயே அ அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.