புத்தி சொல்றதுக்கு அடிமையாகி!!

நம்ம மனசு நம்ம கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு சில சமயங்கள்ல
நமக்கு எதிரா செயல்படும்.

நாம நமக்குன்னு போட்டு வச்சிக்கிட்டு வாழ்ற சில நிபந்தனைகள் இருக்கும்.
நம்ம கவுரவத்தை பாதுகாத்துக்க,
நம்ம சுயத்தை அளவீடு செய்ய,
தன்மானம் காக்க,
நம்ம இயல்புகளை விட்டு
நாம நகராம இருக்க,
பிறரிடம் நாம அண்டி வாழ்ற நிலையை தகர்க்க.

இப்டின்னு...!
நமக்கு நாமே
தடை மதில்களை கட்டியெழுப்பி
அதற்குள்ள பிடிச்சோ, பிடிக்காமலோ வாழ்ந்துட்டு இருப்போம்.
அது நமக்கு கம்பஃர்டபள் ஃபீல் தரல்லன்னாலும்,
அதுக்குள்ளேயே சுழன்றுட்டு வாழ்றதே உசிதம்னு நெனக்கிறோம்.

ஆனா...!
சில சந்தர்ப்பங்கள்ல நமது சில உணர்வுகள் இந்த சுய கட்டுப்பாட்டு மண்டலத்தை உடைத்துத் தகர்க்கும்.
நம்ம மனசுக்கும், புத்திக்கும் இடைல மில்லிமீட்டர் அளவுக்கான
ஒரு இடைவெளில,,,
தர்க்கமும், சச்சரவும் நடந்துட்டு இருக்கும். மனசு ஒன்ன சொல்லிட்டு இருக்குறப்ப,
புத்தி அதுக்கு நேர்மாறா இன்னொன்ன திணிச்சிட்டு இருக்கும்.

பல சந்தர்ப்பங்கள்ல இந்தக் கட்டத்த அடையுறப்ப,
நாம மனசாட்சிய பொய் சமாதானப்படுத்தி உக்கார வச்சுட்டு!
புத்தி சொல்றதுக்கு அடிமையாகி நிக்கிறோம்.

அப்போ தான்...!
அத்துனை காலம் கட்டிக்காத்த நம் சுயங்கள், நம் ஏக்கங்கள், நம் சொந்த துன்பம், துயரம், வடுக்கள், அநாவசிய ஆசைகள்,
இன்ன பிற எல்லாவற்றையும்
நிதானமிழந்து பிறர் கிட்ட
பகிர்ந்துத் தீர்த்துட்டு வந்துட்றோம்.

அப்றம் அவங்களயே நமக்கான தேடலா, நமக்கான ஆறுதலா,
நமக்கான எல்லாமுமாக,
மனசு பிக்ஸ் பண்ணி வச்சிடுது.
அதிலிருந்து அவுங்க கொஞ்சம் நம்மல விட்டு நவுந்து போனாலும்
நமக்கு சஞ்சலம் ஏற்படுது.

அங்கேயே திரும்பத் திரும்ப ஆறுதலையும், அக்கறை பரிமாற்றங்களையும்,
நம் எண்ணங்களின் வெளிப்பாடுகளுக்கான பதில்களாக அவுங்களே இருக்கனும் என்றதையும்,
மனசு தன்னாலயே நாடி நிக்குது.

இப்டி அன்புக்காக கெஞ்சி நிக்கிறப்ப, ஒருத்தருடைய அருகாமை
அந்நியப்பட்டுப் போய்டுமோன்னு?
தவிப்பு வாரப்ப,
அன்பையும் அக்கறையையும்
கெஞ்சிப் பெற வேண்டிய
நிலைக்குள்ள தள்ளப்பட்றப்ப,
இந்த மனசுக்கு ரோசம் இல்லாம போய்
அதே இடத்தில் நின்னு
பிச்சை பாத்திரம் ஏந்துறப்ப,
தன் இயலாமையை எண்ணி
தானே நொந்துப் போறப்ப தான்...!
அவன் தன்னுடைய ஆரம்ப கட்ட
சுய கட்டுப்பாட்டு வளையத்தை தாண்டி
ஏன் வந்தோம்னு யோசிக்கிறான்.
அந்த நொடிகள்ல தான் இந்த மனசு நிர்வாணப்பட்டு நிக்குது.

என்னைக்காவது மனம் இப்டி
நிர்வாண நிலையில் உள்ளத
உணர நேர்கையில்!
யோசிச்சுப் பார்த்தாக்கா,
அங்க நாம செஞ்ச பெரும் ஆணித்தரமான ஒரு பிழைய கண்டுபிடிக்கலாம்.

அதான் நம்ம புத்திக்கும்,
மனசுக்கும் நடுவுல நடந்த
முரண்பாட்டுச் சிக்கல்.
அந்த எடத்துல தான் மனுஷனுக்கு
ரொம்ப அவதானமா,
நிதானித்து நிற்க வேண்டிய
தேவையும், கட்டாயமும் இருந்திருக்கும். அதை அந்த கணங்கள்ல
உடச்சிட்டு வெளிய வராம,
கட்டுக்குள் வைக்கத் தெரிஞ்சிட்டா போதும்.

Train Your Mind!
To Be Calm In Every Situation

நன்றி
Haroon HN

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.