பிரதமர் ரணில் ஆற்றவுள்ள விசேட உரை!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்று(புதன்கிழமை) பிற்பகல் அவர் இவ்வாறு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது பிரதமர் பதவியினை விட்டு விலகியதன் பின்னர் அவர் இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்று இன்றைய தினம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

15 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள காபந்து அரசாங்கத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.