எனைமாற்றும் நீ - கவிதையல்ல கிறுக்கல்!!!
நீ வாசிப்பதை
ரசிக்கச் செய்கிறாய்
உலக ரசனைகளின்
உச்சம் இதுதானோ.?.
உந்தன்
ஒவ்வொரு அசைவின்
அழகினையும்
மனதில் ஒத்திக்கொள்கிறேன்
ஒட்டு மொத்த
ஞாபகங்களின்
சேமிப்புக் கிடங்கு இதுதானோ.?.
உனக்கே உரிதான
குட்டிக் குட்டிக் குறும்புகளை
எண்ணியெண்ணி
பூரித்துக்கொள்கிறேன்
கிளர்ச்சியடையும்
அன்பின்
புத்தம் புது புரட்சி இதுதானோ.?.
புன்னகைப் பூக்களை
நீ தூவுகையில்
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும்
மனதினிலே மலர்கிறேன்
மகிழ்வின்
எல்லை தொட்டுத் திரும்பும்
முகத்தின் மலர்ச்சி இதுதானோ.?.
கொஞ்சும்
உன் மழலை மொழியாலே
அறிவின் மொழிகளையெல்லாம்
மறக்கிறேன்
இலக்கிய நுட்பங்களை மறந்து
மதி மயங்குவது இதுதானோ.?.
-பிரகாஷ்.
கருத்துகள் இல்லை