கொள்கலனில் மறைத்திருந்த 25 பேர் கண்டுபிடிப்பு!
நெதர்லாந்திலிருந்து வௌியேறிய சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குளிரூட்டப்பட்ட கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பிரித்தானியாவுக்குச் செல்லவிருந்த அந்தச் சரக்குக் கப்பல் டச்சு துறைமுகத்திற்குத் திரும்பியதாகவும் அவசரச் சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு துறைமுகத்திலேயே மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் இரண்டு பேர் அதிகக் குளிரால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த மாதம், கொள்கலன் பாரவூர்தி ஒன்றின் குளிரூட்டப்பட்ட கொள்கலனிலிருந்து 39 வியட்நாம் நாட்டவர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் முயற்சிகளைத் தடுக்க, பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை