அவுஸ்ரேலியாவுக்கு பேரழிவு எச்சரிக்கை!

தெற்கு அவுஸ்ரேலியாவுக்கு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தஸ்மானியாவின் காட்டுத் தீ மிக மோசமான கட்டத்தை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் தீவிரமாகி வரும் காட்டுத் தீயினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூ சௌத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் காட்டுத் தீயினால் 500 இற்கும் அதிகமான குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன. மேலும், அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் காட்டுத் தீயினால் புகை மண்டலம் சூழ்ந்துள்ளன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.