மைனா நந்தினியின் சுவாரஷ்ய காதல் கதை!!

பிரபல நடிகை மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஷ் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் சொந்தபந்தங்கள் வாழ்த்த கோவிலில் திருமணம் நடந்தது.


நீண்ட காலம் நண்பர்களாக இருந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

மதுரையை சேர்ந்த நந்தினி உள்ளூர் சேனலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது.

இதை சரியான பயன்படுத்திக் கொண்ட நந்தினிக்கு, சரவணன் மீனாட்சியின் மைனா கதாபத்திரம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது, மதுரை ஸ்லாங்கில் அசத்தும் அவரது நடிப்பால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களே ஆனாலும், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்து போன நந்தினியை குடும்ப உறவுகளும், நண்பர்களும் தேற்றினர், தொடர்ந்து தன்னுடைய குடும்பத்திற்காக மீண்டும் நடிக்கத் தொடங்கினார் நந்தினி.

பல இன்னல்களை கடந்து வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது, யோகேஷின் குடும்பத்தினர் வந்து நந்தினியின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர்.

யோகேஷ் நீண்ட கால நண்பர் என்றாலும், இரண்டாவது திருமணம் என்பதால் சற்று யோசித்தாலும், அவரது குணநலன்கள் பிடித்து போக, இப்படி ஒருத்தரை வாழ்க்கையில் இழக்கக்கூடாது என்பதற்காக சம்மதம் தெரிவித்தாராம்.

தொடர்ந்து யோகேஷின் பெற்றோரிடம் வெளிப்படையாகவே சில விடயங்களை பேசினாராம் நந்தினி.

இப்படி இருவீட்டாரின் விருப்பத்துடன் தங்களது நட்பு காதலில் முடிந்ததாக நெகிழ்கின்றனர் மைனா- யோகேஷ் தம்பதி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.