உறங்காத கண்மணிகள்.!!
உறங்கிய கண்மணிகள் ஊரெல்லாம் விழித்திட அழுதிடும் பிள்ளை
கான மரங்களும் உறைந்திட்டு ஓர் கணம்
மௌனித்து போகும்
தந்தையின் நீள் துயில் சிந்தையில்
கலந்திட்ட சிறுகுரல் அழும்
ஆதியின் வேரினை வேதமாய் கொண்டெங்கும் தேசங்கள் பிணையும்
சத்திய வேள்வியின் உத்தம நினைவதை
தீபங்கள் வரையும்
கற்களின் முன்னே காரிருள் உடுத்தி
கார்த்திகை நிறையும்
கான மரங்களும் உறைந்திட்டு ஓர் கணம்
மௌனித்து போகும்
தந்தையின் நீள் துயில் சிந்தையில்
கலந்திட்ட சிறுகுரல் அழும்
ஆதியின் வேரினை வேதமாய் கொண்டெங்கும் தேசங்கள் பிணையும்
சத்திய வேள்வியின் உத்தம நினைவதை
தீபங்கள் வரையும்
கற்களின் முன்னே காரிருள் உடுத்தி
கார்த்திகை நிறையும்

.jpeg
)





கருத்துகள் இல்லை