நடிகை காஜல் அகர்வாலின் கனவு இதுதானாம்!!

100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது இலட்சிய கனவு என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.


தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது ஹிந்தி படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் கூறுகையில், ”கதாநாயகியாக 10 வருடங்கள் நடித்து முடித்து விட்டேன். இப்போதும் அதிக பட வாய்ப்புகள் வருகின்றன். 10 வருடத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை திரையில் பார்க்கும் ரசிகர்களும் என்னோடு வேலை செய்பவர்களும் புரிந்து இருப்பார்கள்.

சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் சக்தி அனுபவத்தால் வந்து இருக்கிறது. அதே மாதிரி கதை தேர்விலும் அனுபவம் வந்து இருக்கிறது. 50 படங்களை தாண்டி விட்டேன். 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது இலட்சிய கனவாக இருக்கிறது.

அத்துடன் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். ஹிந்தி படங்களும் உள்ளன. ஆனால் கன்னட மொழியில் இதுவரை நடிக்கவில்லை. தற்போது உபேந்திரா கதாநாயகனாக வரும் கப்சா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளளேன் கன்னடத்தில் இது எனக்கு முதல் படம். ஆனாலும் இந்த படத்தை 7 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்” எனக் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.