மன்னாரில் முதன்முறையாக ஒளவையார் விழா!
மன்னாரில் முதன்முறையாக ஒளவையார் விழா நடைபெற்றுள்ளது.இவ்விழா மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் செந்தமிழருவி மாஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இன்று (சனிக்கிழமை) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட ரீதியில் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவட்ட இந்து மக்களை ஒன்றிணைத்து ஒளவையார் விழா நடைபெற்றதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
மன்னார் பிரதேச செயலகத்தில் உள்ள ஒளவையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஒளவையார் விழா ஆரம்பமானது.
குறித்த நிகழ்வுற்கு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு, சிறப்பு விருந்தினர்களாக சித்த ஆயுள்வேத வைத்தியர் செல்வி பூ.ரோகினி மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி.செல்வரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அதேநேரத்தில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை