விசேட பரீட்சை மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.


பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது பரீட்சைக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலை, வட்டரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் ஆகிய இடங்களிலேயே இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு 4,33,050 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2,83,958 தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.