துயிலுமில்லம் போவோமா.??

மகள்...👉👉அம்மா துயிலுமில்லம் போக ராணி சித்தியும் வாறாவாம்.எல்லாரும் சேர்ந்து ஆட்டோவில போவமே..?

தாய்...👉👉உனக்கென்ன விசரே புள்ள.நாட்டு நிலமை தெரியாம கதைக்காத.அங்க ஒருத்தரும் துயிலுமில்லம் போறேல.பேசாம இருங்கோ,
மகள்...👉👉ஏனம்மா எங்கட தங்கச்சியையும்.ராசன் மாமாவையும் கனகபுரம் துயிலும் இல்லத்திலதான் விதைச்சது. அதை மறந்துபோனியளோ..?
தாய்...👉👉நீ செய்தியல கேட்டாத்தானே,நாட்டு நடப்பு தெரியாம கதைக்காத.நாடெல்லாம் ஆமியை பாதுகாப்புக்கு போட்டுக்கிடக்கு.எல்லா இடமும் ஆமியும் பொலிசும், என்ன நடக்குதோ தெரியாதென்று எங்கட சனங்கள் பயத்தில நிற்குதுகள்,அதால சனங்கள் பெரிசா துயிலுமில்லம் போகாதுகள் ,நாங்களும் போகவேண்டாம்,
மகள்...👉👉உதயன் பேப்பரில புலிபயங்கரவாதிகளை நினைவுகூர விடமாட்டன் என்று இப்பத்த ஜனாதிபதி சொன்னதாக பேப்பரில போட..உவர் தான் அப்படி சொல்லேல எண்டு பேட்டி கொடுத்திருந்ததை நான் பார்த்தனான் அம்மா. உவற்ற கதையை கேக்கேக்க விளக்கேற்றலாம் போலதான் கிடக்கு.
தாய்...👉👉என்னடி புள்ள வெள்ளக்கொடியோட வந்த பெடியள சுட்டவங்கள்தானே,இப்ப உப்புடி சொல்லிப்போட்டு அந்த நேரம் மாறி நிண்டா என்ன செய்யிறது..?
மகள்...👉👉அவர் அப்படி எதுவும் செய்யமாட்டார் அம்மா,நெடுகலும் ஒரு மனிசர் ஒரேமாதிரி இருப்பினமே,அவர் "முதல்வன்"பட பாணியில அதிரடியான உத்தரவுகளை போட்டு மக்களுக்கு கடமை செய்றார் உங்களுக்கு தெரியாதோ,ஆட்டோவில எல்லாம் போறாராம்,
தாய்...👉👉என்னடி புள்ள வந்த உடனமே கொழும்பில தமிழிழ இருந்த வீதி பெயர் பலகை எல்லாத்தையும் சிங்களமா மாத்திப்போட்டாங்களாம் நீவேற,
மகள்...👉👉அம்மா மனோகணேசன் ஏதோ கதைச்சவராம்.திரும்பவும் மாத்தபோறாங்களாம் என்று இருந்ததம்மா,
தாய்...👉👉என்னவோ நீ சொல்றாய் நான் கேட்கிறன்,நாங்கள் துயிலுமில்லதுக்கு போக முன்னால நின்டு உவனுகள் மற்ற பாட்டி.... போட்டோ எடுப்பானுகள் அதையும் மனசில வச்சிரு.
மகள்...👉👉எடுக்கட்டும் அம்மா, நாங்கள் வருசத்தில ஒரு நாள்தானே துயிலுமில்லம் போறம்,அதுவும் மரணித்துப்போன எங்கட இரத்த சொந்தங்களிற்காகத்தானே
தாய்...👉👉பின்ன என்ன நாங்கள் துயிலுமில்லத்துக்கு சண்டை பிடிக்கவே போறம்,உவனுகள் கையக்கால வச்சுக்கொண்டு சும்மா இருக்கோணுமே,ஆனால் உவங்கள் முதல் செய்ததுகள சனம் மறக்கேல.சனங்கள் பயப்பிடுதுகள் பெரிசா போகாதுபோல
மகள்...👉👉அம்மா அதுதான் எங்கட சனமும் தேர்தலில உப்புடி நின்டதுகள்..ஆனால் அவங்கள் இந்தமுறை ஒன்றும் செய்யாங்கள் என்று நினைக்கிறன்,வந்த புதுசுதானே பேசாமல் விடுவாங்கள் போல,நாங்கள் போவம்,
தாய்...👉👉ஏன்ரி புள்ள வீண் சோலிய. விளக்கேத்துற நேரத்துக்கு மாம்பழம் அண்ணயின்ர கடையில ஒரு சுட்டி விளக்கை வாங்கி வீட்டிலவச்சு விளக்கை கொழுத்திவிடுவமே..?
மகள்...👉👉 என்னம்மா உப்புடி சொல்லுறியள்,உங்களுக்கு பயம் என்றா நீங்கள் நில்லுங்கோ,நான்போய் மாமாக்கும்,தங்கச்சிக்கும் விளக்கேற்றிப்போட்டு வாறன்.
தாய்...👉👉எனக்கு கட்டேலபோற வயசாபோச்சு புள்ள,நான் என்ர உயிருக்கு பயபிடேல,நான் பெத்த பிள்ளைக்கும்,கூடப் பிறந்த தம்பிக்கும் விளக்கேற்ற எனக்கு மட்டும் ஆசை இல்லையோ.?என்ன செய்யிற உன்னாலதான் நான் யோசிக்கிறன்.
மகள்...👉👉சரி அம்மா யோசிக்காதையுங்ககோ எங்கட சனங்களின்ர நிலப்பாட்டை பார்த்து போவம்,எதுக்கும் மாலா அத்தையிட்ட 27 ஆம் திகதி துயிலுமில்லம் கொண்டுபோக இரண்டு மாலைகட்டித்தர சொல்லிப்போட்டு வாறன்.
தாய்...👉👉சரி புள்ள நான் என்ர சின்னவள் இசையருவிக்கும்.தம்பி ஆதவனுக்கும் கொண்டுபோய் படைக்கக்கூடிய மாதிரி விருப்பமான நொறுக்கு சாப்பாடு ஏதும் செய்யிறன் நீ போட்டுவா..
**பிரபாஅன்பு**
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.