அஜித் பவார் மீதான ஊழல் விசாரணை முடித்து வைப்பு?


மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், “நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன். நீர்ப்பாசன, கூட்டுறவு வங்கி ஊழலில் ஈடுபட்ட அஜித் பவாரை ஆர்தர் ரோடு ஜெயிலுக்குள் தள்ளுவேன்” என்று பேசினார்.

ஆனால், இன்று (நவம்பர் 25) பட்னவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் இருக்கும் நிலையில் அஜித் பவார் மீதான நீர்ப்பாசனக் கட்டுமான ஊழல் வழக்குகளில் ஒன்பது விசாரணைகளின் கோப்புகள் மூடப்பட்டுவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.



ஆனால் இதுகுறித்து மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஊழல் ஒழிப்புத்துறை நாக்பூர் உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 45 நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பான 2654 டெண்டர்களைப் பற்றி விசாரித்து வருகிறது. இதுவரை 212 டெண்டர்கள் பற்றிய விசாரணை முடிக்கப்பட்டிருக்கிறது. 24 வழக்குகளில் 4 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 28 ஆம் தேதி விசாரணை விவரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும். அதற்காக நடத்தப்பட்ட விசாரணையில் ஒன்பது டெண்டர்கள் தொடர்பான புகார்களில் ஆதாரம் இல்லையென்று முடிக்கப்பட்டுள்ளன. இந்த 9 விசாரணைகளில் எதுவும் அப்போதைய மாநில நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகத் தலைவர் அஜித் பவார் தொடர்பானது இல்லை” என்று அறிவித்திருக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன, ”என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ, “மகாராஷ்டிராவில் சட்டவிரோத பாஜக-அஜித் பவார் அரசாங்கத்தை முன்னெடுக்க பேரம் பேசும் கருவியாக ‘ஊழல் வழக்குகளை’ மூடுவது இப்போது பயன்படுத்தப்படுகிறது” என்று கண்டித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.