யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் விதித்துள்ள திடீர் தடை!!
யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது என பல்கலை நிர்வாகம் இன்றைய தினம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
யாழ்.பல்கலை வளாகத்தினுள் இன்று மற்றும் நாளை எந்த நிகழ்வுகளையும் நடத்த கூடாது என மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நிர்வாகத்தின் இந்த உத்தர்வானது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினம் பல்கலை வளாகத்தினுள் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அத்துடன் நாளைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக்கால பகுதியில் யாழ்.பல்கலை வளாகத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததுடன் , நிகழ்வுகளை ஒழுங்கமைத்த மாணவ தலைவர்களுக்கும் இராணுவத்தரப்பால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட வந்த சம்பவங்களும் , அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் , தாக்குதல்கள், மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் என்பன இடம்பெற்றிருந்தன.
அதன் பின்னரான ஆட்சி மாற்றத்தையடுத்து பல்கலை வளாகத்தினுள் அச்சுறுத்தல்கள் இன்றி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந் நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக இவ்வாறான ஒரு அறிவுறுத்தல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை