மடு. பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவிரர்நாள் நிகழ்வு!📷
நேற்று முன்தினம் தொடக்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்டன. அத்துடன் நினைகூரல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அகற்றப்பட்டு நினைவுகூரல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று (புதன்கிழமை) மாலை 6.5 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் மாவீரர் தினம் இடம்பெற்றது.
பண்டிவிருச்சான் நினைகூரல் நிகழ்வு இடம்பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீரென சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வுத் துறையினர் மற்றும் பொலிஸ், இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நனைவுகூரலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், நானாட்டன் பிரதேச சபையின் தவிசாளர் பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர, பிரதேச சபை உப தவிசாளர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo



.jpeg
)





கருத்துகள் இல்லை