மன்.ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள்- 2019!!📷

மன்னார் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.


இதன்போது இன்று (புதன்கிழமை) மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பண்டிவிருச்சானைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான பொன்னுச்சாமி இராமநாதன் என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக் கணக்காணவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதியில் மாவீரர்களின் நினைவாக குடும்பத்தினருக்கு தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.