அன்பு சிங்கள உறவுகளே!

நாங்கள் இப்போது மாவீரர் தினத்தை நாடு பிடிப்பதற்காக நினைவுகூருவதில்லை...


உங்களுக்கு எதிராய் ஆயுதம் தூக்கினோம் என்பதை சொல்லிக்காட்ட நினைவுகூருவதில்லை...

உங்களோடு பிணக்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட நினைவு கூருவதில்லை...

அவர்கள் எல்லாம் எங்கள் பிள்ளைகள்...
அவர்கள் எல்லாம் எங்கள் சகோதரர்கள்...
அவர்கள் எல்லாம் எங்கள் நண்பர்கள்...

அத்தனையிலும் மேலாய் அவர்கள் எங்களுக்காக வித்தானவர்கள்...

நீங்கள் அவர்களை நாயகர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்...
நீங்கள் அவர்களை பணிய வேண்டாம்..

ஆனால் ,

அவர்கள்மட்டில் எங்களுக்கு பெருத்த பக்தியும் மரியாதையும் இருக்கிறது என்பதை மதியுங்கள் போதும்...

அவர்கள் எங்களுக்காக வித்தானவர்கள் என்கிற நிஜமுணர்ந்த எங்கள் மனங்களை காயப்படுத்தாதீர்கள் போதும்...

அப்போது இலங்கையில் கிழக்கு வெளிப்பதற்காக வானம் ஆயத்தமாகும்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.