டிப்பர் வாகனம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோதியதில் மரணம்!!
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை டிப்பர் வாகமொன்று மோதியதில் குறித்த ஊழியர் உயிரிழந்துள்ளார்.
இன்று(28.11.2019 ) அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கந்தளாய் பராக்கிரம மாவத்தை பகுதியைச் சேர்ந்த டி. டிலான் 28 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிப்பதாவது,
இன்று அதிகாலை Wp LN 0116 இலக்கமுடைய டிப்பர் வாகனமொன்று திருகோணமலையிருந்து குறுணாகலைக்கு சென்ற வேளையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் குழாய்யினுள் இறங்கி எரிபொருள் இருக்கும் அளவினை குறித்த ஊழியர் பார்த்த போது வேகமாச் சென்ற டிப்பர் வாகனம் மோதி விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஊழியரின் தலையில் பாரிய அடி ஏற்பட்டதால் தலை நொருங்கியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, டிப்பர் வாகனம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை