உன் பார்வை ஒன்றே போதும் பகைவன் உயிர் எடுக்க.!

உறுதி கொண்ட பார்வையுடன்
உந்துகணை செலுத்தி உன் கையிலும்...

எதிரி இலக்கு தூரமில்லை
ஏந்தும் கைகள் யாருமில்லை...!
அண்ணன் இலக்கு ஈழம் அதை அடையும் வரை நமக்கேது தூக்கம்...!

நாடு இழந்த எதிலிகள் நாம்
மானம் இழந்து சாகவில்லை இன்னும்!
உன் கையில் உந்துகணை செலுத்தி இனி உறவுகள் ஏந்திடும் நாள் விரைவில்...!

வரியுடை நீ தரித்த வேங்கைப்புலி
வாழ்ந்த மண் மீட்டிட ஏந்தும் எம் கை!
" செய் அல்லது செத்து மடி "
எம் தலைவன் சொன்ன சொற்படி.
காற்றிலும் வேகம் புலியணி
கடல் அலையிலும் தாவும் கரும்புலி...!

மாண்ட மாவீரர் கனவுகள்
மண் மீட்டிடும் வரை ஏது உறக்கம்.
சாதணை படைத்திடும் புலியணியில்
உந்துகணை செலுத்தும் அணி இது!
உன் பார்வை தொலைவில் இல்லை
என் பாதமும் விரைவில் இல்லை :
ஈழமே மூச்சாய்
ஓங்கியே ஒலிக்கும் நாளும்...!!!
Powered by Blogger.