கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்துக் கோரிய மனைவி!

கணவன் குளிப்பது இல்லை எனக்கூறி விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.


இதன்போது, “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு வந்தால் நீதிமன்றம் அதை கட்டளையாக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் தனது கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாகரத்து தொடர்பான விளக்கமளிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். கணவர் தனது சட்டத்தரணி ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு முன்வந்தார்.

இந்த நிலையில் மனு மீதான விளக்கம் இன்று இடம்பெற்ற நிலையில் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி கட்டளை வழங்கினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.