மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு–பிரித்தானியா!
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கிங்ஸ்பெரி லண்டன் எனும் இடத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாங்குள சமரில் வீரகாவியமான லெப்.அழகு அவர்களின் சகோதரி சங்கேஸ்வரி ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியினை வீரவேங்கை லெப்.கேணல் மனோஜ் அவர்களின் சகோதரரும் வடமேற்கு பிராந்திய பணிமனையின் பொறுப்பாளருமான கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்.ஆதனைத்தொடர்ந்து ஈகைச்சுடரினை மன்னார் சமரில் வீரகாவியமான வீரவேங்கை குட்டி அவர்களின் தாயார் ரீட்டா ஏற்றியதுடன் தொடர்ந்து பெற்றோர்களுக்கான கொளரவிப்பு நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo





.jpeg
)





கருத்துகள் இல்லை