மாவீர குடும்பத்திற்கு உதவி.

இலண்டன் அனைத்துலக மனித நேயங்கள்(IFOH) அமைப்பினரால் மாவீர குடும்பத்திற்கு உதவி.

இலண்டன் அனைத்துலக மனித நேயங்கள் அமைப்பினரால் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஆரம்ப காலங்களில் வளர்தெடுத்த லெப். கேணல் சந்தோசம் மாஸ்டரின் சகோதரரும் அனைத்துலக தொடர்பக பணிகளை மேற் கொண்டவரும் முள்ளிவாய்காலில் சரணடைய மறுத்து மகனையும் மனைவியையும் அனுப்பி விட்டு இறுதி வரை போராடி வீரமரணத்தை தழுவியவருமான புதியவன் மாஸ்டரின் மனைவி கால் பாதிப்புக்கு உள்ளாகி நீட்டி மடக்க முடியாது உள்ளமையால் இருக்கை வசதியுடனான மலசலகூடத்தை அமைத்து வழங்கியும் மகனின் கற்றலுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியும் உதவியுள்ளார்கள். இவரும் ஆரம்ப கால நீண்ட வரலாற்றைக் கொண்ட போராளி என்பதுடன் தற்போது தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.