யாழ் பல்கலைக்கழகம் மாவீரர் நினைவேந்தலுக்கு தயார் நிலை பூர்த்தி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு தூபியில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயா் தேசங்களில் நாளை (27) உணா்வுபூா்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை யாழ் பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாாி க.கந்தசாமி யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்றும் நாளையும் எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்தகூடாது என தடை விதித்துள்ளாா்.
எனினும் பல்கலைகழக மாணவா்களால் மாவீரர் தினத்திற்கான ஒழுங்குகள் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது. இதன்படி நண்பகல் 12 மணியளவில் மாவீரா் நினைவு துாபிக்கு மலா்மாலை அணிவித்து 1000 மரக்கன்றுகள் வழங்கப்படது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


.jpeg
)





கருத்துகள் இல்லை