எதியோப்பியாவில் சாதனை படைத்த ஈழத்து வைத்திய நிபுணர்!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட ,நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை படைத்துள்ளார்.


இவர் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும் , அங்கு கற்பித்த ஆசிரியர் மகேஸ்வரனின் புதல்வியும் ஆவார்.

அத்துடன் வைத்திய கலாநிதி ரூபவதனா முன்னைநாள் பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட வீரர் வசந்தன் அவர்களின் மனைவியும் ஆவார்.

எதியோபியாவில் இரட்டை தலையுடன் பிறந்த பெண் குழந்தை ஒன்று 16 மாதமான நிலையில் தூங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு இருந்தது.

இந்நிலையில் வைத்திய நிபுணர் ரூபனா அவர்கள் Norway யிலிருந்து எதியோப்பியாவிற்கு எதுவித பலனும் எதிர்பாராது தொண்டர் அடிப்படையில் சென்று இந்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்

வைத்திய நிபுணர் ரூபவதனாவின் இந்த சேவையானது உலகத் தமிழர்கள் பெருமைப் படக்கூடிய ஒரு விடயமாகும்.

இவர் தமது தாயகத்திற்கும் பல தடவைகள் சென்று சேவை அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பது மேலதிக தகவல்.

இந்நிலையில் வைத்தியர் ரூபவதனா மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.