செட்டிகுளத்தில் அப்பாவி மக்கள் மீது இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் நாள் இன்று!

மன்னார் – வவுனியா எல்லையிலுள்ள செட்டிக்குளம் எனும் கிராமத்தில் தமிழ்ப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையினைக் குறிக்கும். இது இலங்கையின் அன்றைய சிங்களப்பேரினவாத ஜெ. ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசால் இலங்கை ஆயுதப் படையினராலும் ஊர்காவல் படையினராலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் படுகொலைகளில் ஒன்றாகும்.


1984 டிசம்பர் 2 அன்று செட்டிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராணுவம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதிகாலை 05:30 மணியளவில் செட்டிக்குளம் பகுதியை இராணுவம் சுற்றி வளைத்தது. கிராமத்தின் பெரும்பான்மையானோர் இன்னமும் உறக்கத்தில் இருந்தனர். இராணுவத்தினர் வீடுகளில் புகுந்து ஆண்கள் அனைவரையும் ‘விசாரணை’க்கெனக் கூட்டிச் சென்றனர்.

இவ்வாறாக 52 ஆண்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு ஈரப்பெரியகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் 52 பேரும் அருகில் உள்ள மதவாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கத்திகளினால் குத்திக் கொல்லப்பட்டு வாகனங்களால் மிதிக்கப்பட்டதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.