லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்!!


லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் நடைபெற்றன.


ஜக் மெரிற் வயது 25 மற்றும் சஸ்கியா ஜோன்ஸ் வயது 23 ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரிகளான ஜக் மெரிற் மற்றும் சஸ்கியா ஜோன்ஸ் ஆகியோர் கைதிகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்தும் பல்கலைக்கழகத்தின் கற்றல் திட்டத்திற்கான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது பயங்கரவாதி உஸ்மான் கானால் குத்திக் கொல்லப்பட்டனர்.

அவர்களை நினைவுகூர்ந்து லண்டன் நகரத்தில் உள்ள கில்ட்ஹோல் முன்றலிலும்  கேம்பிரிட்ஜில் உள்ள கில்ட்ஹோலுக்கு வெளியேயும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

கேம்பிரிட்ஜில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் ஜக் மெரிற்றின் குடும்பமும் அவரது தோழியும் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.