விரைவில் 2020 இந்திய பிரிமியர் லீக் ஏலம்!!

2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரிமியர் லீக் ரி -20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 கிரிக்கட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.


இந்திய கிரிக்கெட் சபையினால் வருடாந்தம் இந்தியன் பிரிமீயர் லீக் எனும் ஐ.பி.எல் டி20 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து ஏலத்தில் பெற்றுக் கொள்ளும்

டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலத்தின் மூலம் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்தமுறை ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்திய அணிக்காக விளையாடிய 19 வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த 258 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலை இறுதி செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 19 ஆம் திகதி நடைபெறவுள்ள ஏலத்தில் இருந்து அவுஸ்ரேலிய அணியின் முன்னணி வீரர் விலகியுள்ளார்.

இந்த முறை மொத்தமாக 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்களும் 754 பேர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்களும் உள்ளடங்குகின்றனர்.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக அவுஸ்ரேலியாவில் இருந்து 55 பேர் ஏலப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து 54 வீரர்களும், இலங்கையிலிருந்து 39 பேரும் , மேற்கிந்திய தீவுகளில் இருந்து 34 பேரும், நியூசிலாந்திருந்து 24 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 22 பேரும், ஆப்கானிஸ்தானில் இருந்து 19 பேரும், பங்களாதேஷில் இருந்து 6 பேரும்
உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை, அமெரிக்காவில் இருந்தும் ஒரு கிரிக்கட் வீரர் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகளில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், அவுஸ்ரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த முறையும் அவர் விளையாடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

2018-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு பெற்றுக் கொண்டது. ஆனால் காயம் காரணமாக அவர் போட்டி முழுவதும் விளையாடவில்லை.

சர்வதேச போட்டியில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடி இந்திய ரூபாயாகும்.

கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ், ஏஞ்சலோ மேத்யூஸ், ஸ்டெய்ன் ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள் விபரம் வருமாறு:-

றொபின் உத்தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்சட்சன், மார்கன், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட் ஆகியோராவர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.