பத்திரிகையாளர் ஒருவர் வடக்கு ஆளுனராக வருவதற்கு தீவிர முயற்சி!
வடமாகாண ஆளுனராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனை நியமிப்பதற்கு கோட்டாபய தரப்பு முயற்சித்து வருகிறது. அதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக அறிய கிடைத்தது.
ஆறு மாகாண ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் ஆளுனர்கள் நியமிக்கப்படவில்லை.
இதில், வடக்கு தவிர்ந்த ஏனைய இரண்டு மாகாணங்களிற்குமான ஆளுனர்கள் தெரிவாகி விட்டனர்.
வடக்கு ஆளுனர் விவகாரம் மட்டும் இழுபறியில் நீடிக்கிறது
தற்போது முன்னாள் பிரதம நீதியரசர் சிறீபவன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாக தெரிகிறது.
சிறீபவனுடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும், அவர் கொள்கையளவில் இணங்கியதாகவும் தெரிகிறது. இதனால், அவரே பெயர்ப்பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.
இதேவேளை, பல்கலைகழகமொன்றின் விரிவுரையாளருடனும் பேச்சு நடத்தப்பட்டது. அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாண பத்திரிகையாளர் ஒருவரும் ஆளுனர் பதவியை பெற பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். எனினும், கோட்டா தரப்பு அவரை விரும்பவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை