பிரதமரிடம் சம்பள உயர்வு குறித்து மகஜர்!!

இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் முன்னாள் மத்­திய மாகாண கல்வி அமைச்­ச­ரு­மான சுப்­பையா சதா­சிவம் புதிய பிர­த­மரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்தித்துள்ளார்.


இந்த சந்­திப்பு நேற்றையதினம்m அமைச்சு செய­ல­கத்தில் இடம்பெற்றுளது. இதன்போது இந்­திய வம்­சாளி மக்கள் சார்பில் வாழ்த்­துக்­களை தெரி­வித்­த­தோடு மகஜர் ஒன்­றையும் கைய­ளித்தார்.

அதில் நடந்து முடிந்த தேர்­தலின் போது மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பளம் பெற்றுத் தரு­வ­தாக வழங்­கிய வாக்­கு­று­திக்­க­மைய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அந்த மக­ஜரில் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதனை ஏற்­றுக்­கொண்ட பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ உட­ன­டி­யாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் தொடர்­பு­ கொண்டு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியதாக சதாசிவம் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.