புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம்!

புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.


இந்த கூட்டம் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இரண்டாவது அமைச்சரவை கூட்டமாக இது அமைந்துள்ளது.

இதன்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து புதிய வரித்திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.