பண்டாரவளையில் மண்சரிவு!!

பண்டாரவளை தந்திரியா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 18 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.


பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் தந்திரியா பகுதியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையின் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

கடையின் பின்புறத்தில் உள்ள மண்மேடேயே இவ்வாறு சரிந்து விழுந்தது. இதன் காரணமாக கடையில் இருந்த 12 புதிய மோட்டார் சைக்கிள்களும் 6 பழுது பார்க்க வந்த மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.

அத்தோடு, மோட்டார் சைக்கிள்களின் திருத்த பணிகளை மேற்கொள்ளும் உபகரணங்களும் முற்றிலும் சேதமமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனர்த்தம் காரணமாக எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கும் கடை உரிமையாளர், பொருட்களுக்கே பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மண்மேடை அகற்றும் பணியில் பிரதேசவாசிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனரென்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.