வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்!

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக செல்பவர்களின் பதிவுக் கட்டணம் மற்றும் பதிவை புதிப்பிப்பதற்காக அறவிடப்படும் கட்டணம் என்பன குறைக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பதிவு கட்டணமாக இருந்த 17 ஆயிரத்து 837 ரூபாய் தற்போது 16 ஆயிரத்து 416 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதேபோல், பதிவினை புதுப்பித்தலுக்கான கட்டணம் 3,755 ரூபாயாக இருந்த நிலையில் தற்பொழுது 3,456 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு கடந்த முதலாம் திகதியிலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.