இலங்கைக்கு வந்திருந்த அவுஸ்ரேலியர் உயிரிழப்பு!!

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அவுஸ்ரேலியர்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவத்தில் எழுபத்தேழு வயதான பீட்டர் கெனத் கெமன் என்ற அவுஸ்ரேலியரே உயிரிழந்துள்ளார்.

கண்டி- ஹிரஸ்சகல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், அதன் இரண்டாம் மாடியிலிருந்து  நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்தில் கூடிய சிலர் அவரை உடனடியாக மீட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.