காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது.


மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் நேற்று(வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.

இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.