சர்வதேச தலையீட்டினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை -மஹிந்த!!
இராணுவ செயற்பாடுகளில் சர்வதேச தலையீட்டினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை சிறிய நாடாக உள்ளதால், பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம் எனகுறிப்பிட்ட மகிந்த கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய தேசத்தவர்கள் ஈடுபடவில்லை என்றும், ஆனால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இலங்கையர்களே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் எமது நாட்டிற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல என்றும், இந்த வலயத்திலுள்ள ஏனைய நாடுகளின் நன்மைக்காக இந்தப் பயங்கரவாதத்தை நாங்கள் இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இலங்கையில் பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்தியா, மாலைத்தீவு மாத்திரமின்றி மியன்மார், தாய்லாந்து உட்பட அதனை அண்மித்துள்ள நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும் என்றும், இந்நிலையில் எமது இராணுவப் படைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் சில வெளிநாட்டுத் தரப்புகள் எதிர்க்கும் நிலைப்பாடுகளும் காணப்படுகின்றபோதும், இராணுவத்தின் உள்விவகாரத்தினுள் வெளிநாட்டுத் தலையீடுகளை மேற்கொள்ள இறையாண்மை உள்ள நாடுகள் அனுமதிப்பதில்லை எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை