பள்ளத்தில் பாய்ந்ததால் லொறி விபத்து!
நுவரெலியாவில் இருந்து கொழும்பு பகுதிக்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள – பத்தளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக அவரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த லொறியில் பயணித்த, சாரதியும் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த, மேலதிக விசாரணைகளை திம்புள்ள- பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை