ட்ரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த இளம் ஆர்வலர் கிரெட்டா!

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கேலி விமர்சனத்துக்கு, காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுவீடனின் கிரெட்டா துன்பெர்க், பதிலடி கொடுத்துள்ளார்.


ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க்கின் படத்தை இந்த ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுத்த டைம் இதழ், ‘இளைஞர்களின் சக்தி’ என அட்டையில் வெளியிட்டு கௌரவப்படுத்தியது.

இதற்கு பலரும் தொடர்ந்து கிரெட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப், அவரை கேலி செய்யும் வகையில், ‘இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாக செயலாற்ற வேண்டும். பின்னர் அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்’ என டுவிட்டரில் பதிவிட்டார்.

அமெரிக்க ட்ரம்ப், கேலி செய்வது நாகரிகமாக இல்லை என்று ட்ரம்ப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

ஆனால், கிரெட்டாவோ ட்ரம்ப்புக்கு வேறுவிதமாக பதிலடி அளித்தார். கிரெட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள தன் விபரத்தில், ‘இளம்பருவப் பெண் தனது கோபத்தைக் கையாள்வது குறித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். தற்போது தனது நண்பருடன் பழைய படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்’ என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.