கிளி / தர்மபுரத்தில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
கிளிநொச்சி, பரந்தன் ஏ-35 வீதியில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் தர்மபுரம் நெத்தலியாற்றுப் பாலத்தினை மீளமைக்குமாறு கோரி மக்கள வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கவும் தர்மபுரத்தில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நெத்தலியாறு பாலத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதில் பெருமளவானோர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரம் ஏ-35 வீதியின் ஒரு பகுதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மகஜர் ஒன்றினையும் தர்மபுரம் புனித சபேரியார் ஆலய பங்குத்தந்தை அன்ரனி வின்சன் சில்வஸ்டர் தாஸிடம் கையளித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை