கிளிநொச்சியில் 11 வயதுச்சிறுமி துஷ்பிரயோகம்!!

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுபத்தியுள்ளார்.


இதனை அவதானித்த பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாருக்கு பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவை கடையினையும் தீயிட்டுக் எரித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

குறித்த பகுதியில் சிறு புடவை கடை நடத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபார நிலையம் அமைத்து நடத்தி வருகின்றார் என்றும்,


எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும். 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடத்தி வருகின்றார் எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார்.


ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

 குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக காணொளி எடுத்த பிரிதொரு நபர் அதனை ஆதாரமாக பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.