நத்தார் கரோல் நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில்!!

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய வழிகாட்டலின் கீழ் யாழ் படைத் தலைமையகத்தில் நத்தார் கரோல்ஸ் நிகழ்வுகள் இம் மாதம் (14) ஆம் திகதி யாழ் புனித மரியார் கதிட்ரால் தேவாலயத்தில் இராணுவ கரோல் கீதங்களுடன் கோலாகலமாக இடம்பெற்றது.


யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55, 51 மற்றும் 52 ஆவது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டில் இந்த நத்தார் கரோல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக யாழ் மறை மாவட்ட ஆயர் டொக்டர் பீ ஞானப்பிரகாசம் வருகை தந்தார். இவரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் 55, 51, 52 ஆவது படைப் படைத் தளபதிகள் வரவேற்றார்கள்.

நிகழ்வின் முதல் அங்கமாக யாழ் மாவட்ட அருட் தந்தையான டொக்டர் பி.ஜே. ஜபரத்தினம் இயேசு கிறிஸ்துவின் சமாதான செய்தியை உரைத்து நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நாடகங்கள, கீதங்கள், நடனங்களை பார்வையாளர்களது கண்களை கவரும் வண்ணமாக விளங்கியது. நல்லூர் புனித பெனடிக் றோமன் கத்தோலிக்க கல்லூரி, நாவாந்துரை புனித நிக்கோலஷ் தேவாலயம், புனித மரியாள் இளைஞர் கெதீட்ரல், சுன்னாகம் புனித அந்தோனியார் தேவாலயம், நல்லூர் ஹீமாலயா நடனக் குழுவினரது பங்களிப்புடன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

கரோல் நிகழ்ச்சியில் யாழ் மாவட்ட செயலாளர், யாழ் இந்திய தூதரகத்தின் பிரதானி, முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.