கிளிநொச்சி இளைஞர்கள் ஒரே நாளில் சாதனை!
கிளிநொச்சி மாவட்டத்தில் கிறவல் கொண்டு செல்லும் டிப்பா் வாகனங்களால் சேதமாக்கப்பட்ட வீதியை இளைஞா்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து டிப்பா் வாகனங்களாலேயே புனரமைப்பு செய்துள்ளனா்.
கிளிநொச்சி - அழகாபுாி பகுதியின் ஊடாக செல்லும் பழைய கண்டி வீதியில் உள்ள கொக்காவில் சந்தியை அண்மித்த பகுதியில் தற்போது கிரவல் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,அங்கிருந்து வெளியிடங்களிற்கு கிரவல் ஏற்றிச் செல்லப்படுகின்றது.
குறித்த பணியில் 75ற்கும் மேற்பட்ட டிப்பா் வண்டிகள் ஈடுபடுவதனால் அப்பகுதி வீதிகளில் பெரும் குன்றும் குழிகளும் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக அப்பகுதியால் பயணிக்கும் பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்றுக் காலைமுதல் அப்பகுதி ஊடாக கிரவலை ஏற்றிவரும் சகல டிப்பா் வண்டிகளையும் வழிமறித்து தமது நிலமையை தெளிவு படுத்தியுடன், இந்த நிலமைக்கு தீர்வாக சகல டிப்பர் வண்டிகளும் கண்டிப்பாக ஒரு சுமை கிரவல் இந்த வீதியில் பறித்த பின்பே சேவையில் ஈடுபட முடியும் எனவும் கூறியுள்ளனர் .
இதனையடுத்து டிப்பர் வண்டிச் சாரதிகள் அனைவரும் ஒவ்வொரு சுமை கிரவலை அவ் வீதிக்கு பறித்து ஒத்துழைத்ததை அடுத்து, நேற்று ஒரே நாளில் 56 டிப்பர் கிரவல் பறிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையின் மோட்டர் கிரைன்டர் மூலம் செப்பனிடப்பட்டது.
மேலும் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் முயற்சியினால் ஒரு கிலோ மீற்றர் வீதி ஒரேநாளில் செப்பனிட்டமை அப்பகுதி மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை