இந்தியாவில் பரவலாகும் சிங்கள மொழி ஊடுருவல்!
இதுவரையிலும் குறித்த பெயர் பலகைகள் மற்றும் கல்வெட்டுகள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த தீர்மானத்தை அடுத்து கௌதம புத்தரின் பிறப்பிடமான புத்தகயா, குஷினாரா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களிலும் சிங்கள மொழியில் பெயர் பலகைகள் அமைப்பதத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் அதிகமாக இலங்கையை சார்ந்த சிங்கள பௌத்த மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர்.
எனவே இவ்வாறு சிங்கள மொழியை உபயோகிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மத்திய அரசின் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நல்லுறவை மேலும் நிலை நாட்ட சிறந்த சந்தர்ப்பமாக இது அமையும் என தெரிவித்துள்ளார்.
சாஞ்சி பௌத்த விகாரையில் வருடாந்தம் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதுடன் இதன்போது சிங்கள மொழி பெயர் பலகைகளை திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த சாஞ்சி பௌத்த விகாரையின் விகாராதிபதி பானகல உபதிஸ்ஸ தேரர் கூறுகையில், அண்மையில் சாஞ்சி பௌத்த விகாரைக்கு வந்த அமைச்சர் பிரகலாத் சிங் படேல் இப்பிரதேசத்துக்கு அதிகமாக வரும் சிங்கள பௌத்த சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த நடவடிக்கையை முன்னெடுத்தார் என தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை