மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!!

யாழ்.அரியாலை- பூம்புகார் பகுதியில் மணல் அகழ் வில் ஈடுபட்டிருந்த 5 மணல் கொள்ளையர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாக பெக்கோ வாகனத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியின்றி அந்தப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட கண்டறியப்பட்டது .

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு டிப்பர் வாகனம் 3 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.